இயற்கையின் சிறந்த நண்பன் "நெருப்பு
காட்டுத்தீ எப்படி உருவாகின்றது மற்றும் அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.....
காட்டில் ௨ள்ள மரங்கள் இலையுதிர்காலப் பருவங்களில் அனைத்து இலைகளையும் ௨திர்த்துவிட்டு மொட்டை மரமாகி பிறகு துளிர்ந்து புதிய இலைகளை உருவாக்கிக்கொள்ளும். கீழே ௨திர்ந்த இலைகள் எல்லாம் பூமியில் புதையுண்டு
போய் மழை பெய்யும் நேரங்களில் மக்கும். அப்படி இலைகள் மக்கும் போது அதிலிருந்து ஒரு திரவம் ௨ற்பத்தியாகி பகல் நேரங்களில் சூரிய வெப்பத்தின் காரணமாக மீதேன் வாயுவாக மாறும். இந்த மீதேன் வாயு எளிதில் தீப்பற்றக் கூடியது. சூரிய வெப்பம் கடுமையாக இருக்கும் நாட்களில் மீதேன் வாயு ஆவியாகி அருகே இருக்கும் காய்ந்த புல், சருகு இவைகளின் மேல் பரவும் போது அது ஒரு நெருப்பு சுவாலையாக மாறும்.
புவியியல் வல்லுநர்கள் காட்டுத்தீ நிகழ்வுகள் இயற்கையின் சமநிலையைக் காப்பதில் அது முக்கியப் பங்கு வகிக்கிறது.
மேலும் சில அரிய வகை தாவரங்கள் தங்களுடைய விதைகள் முளைப்பதற்காக நெருப்பின் வெம்மையை நாடுவதாகவும் தெரிகிறது.
காட்டுத்தீ நிகழ்வுகள் சில சமயங்களில் நெருப்பின் வேகம் கட்டுக்கு அடங்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. சென்ற சில வாரங்களுக்கு முன்பாக உருவான அமேசான் காட்டுத்தீயும் அப்படிபட்டதுதான்.
ஆனால் அடுத்த சில ஆண்டுகளுக்குள் அமேசான் மீண்டும் பழைய பொலிவுக்கு திரும்பி விடும் என்பது மட்டும் சர்வநிச்சயம்.
காடுகள் அழிவது மனிதர்களால் மட்டுமே. காடுகள் தன்னை தானே அழித்துக் கொள்வது இல்லை. அப்படியே அழித்துக் கொண்டாலும் மீண்டும் அவைகள் தன்னை உயிர்ப்பித்துக் கொள்ளும்.
காரணமில்லாமல் படைப்பில்லை......!
காரணமில்லாமல் அழிவில்லை........ !
Comments
Post a Comment